எம்மைப் பற்றி

எமது நோக்கு

காலநிலை மற்றும் வானிலை பற்றிய சேவைகளை வழங்கும் ..... நிலையமாக விளங்குதல்.

எமது செயற்பணி

நாட்டின் முன்னேற்றத்திற்கும் சர்வதேச தரங்களுக்கு ஏற்ப செயற்பட்டு அரச நிறுவனங்கள், தனியார்துறை நிறுவனங்கள் மற்றும் பொது மக்களுக்கு காலநிலை, வான் காலநிலை, சமுத்திர காலநிலை, நீர்நிலைகளின் காலநிலை, விவசாயக் காலநிலை, வானிலை, நட்சத்திர விஞ்ஞானம் பற்றிய சேவைகளை வழங்குதல்.

எமது குறிக்கோள்கள்

திணைக்களத்தின் நோக்கமாக அமைவது,

  • சர்வதேச வளிமண்டலவியல அமைப்பின் தரத்திற்கேற்ப காலநிலை மூலப் பொருட்களை கண்காணித்து அவற்றினை ஒன்றுசேர்த்தல் மற்றும் வானிலை பற்றிய தரவு களஞ்சியம் ஒன்றினைப் பேணிவருதல்.
  • தேசிய நிலையமாகச் செயற்பட்டு காலநிலை மற்றும் வானிலை சேவைகளை வழங்குதல்.
  • காலநிலையுடன் தொடர்புடைய நிகழ்வுகள் மற்றும் சுனாமி முன் எச்சரிக்கை மற்றும் ஆலோசனை வழங்கல்.
  • சர்வதேச வளிமண்டலவியல் அமைப்பு மற்றும் சர்வதேச சிவில் விமான சேவைகள் அமைப்பு என்பன விதித்துள்ள தொழில்நுட்ப ஒழுங்கு விதிகளுக்கு ஏற்ப உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானச் சேவைகளுக்கு வானிலை பற்றிய சேவைகளை வழங்குதல்.
  • காலநிலை, வானிலை, வானிலை மாற்றங்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய விடயங்கள் தொடர்பான கற்கை ஆராய்ச்சிகளில் ஈடுவடுவதற்கு ஊக்கமளித்தல் மற்றும் அந்த தொனிப்பொருளுடன் தொடர்புடைய துறைகள் பற்றி பொது மக்களை விளிப்பூட்டும் நிகழ்ச்சித் திட்டங்களை ஒழுங்கு செய்தல் மற்றும் அவற்றிற்கு பங்களிப்புச் செய்தல்.
  • வானசாஸ்திரம் பற்றிய சேவைகளை வழங்குதல் மற்றும் நிலப்பரப்பின் காந்தச் சக்தியுடன் தொடர்புடைய சேவைகள்.

திணைக்களத்தினால் வழங்கப்படும் சேவைகள்

  • பொது மக்களுக்கும், விவசாயம், வலு, கடற்றொழில், கடற்படை, காப்புறுதி மற்றும் ஆர்வம் காட்டும் ஏனையத் துறைகளுக்கு காலநிலை மற்றும் வானிலை சார்ந்த சேவைகளை வழங்குதல்.
  • சீரான காலநிலைத் தன்மைகள் (சுறாவளி, தடும் மழை, இடி மின்னல், கடும் காற்று உட்பட), சுனாமி பற்றிய விளிப்பூட்டல் மற்றும் ஆலோசனைகளைப் பெற்றுக்கொடுத்தல்.
  • விமானச் சேவைகளுக்குத் தேவையான வானிலைத் தகவல்களைப் பெற்றுக்கொடுத்தல்.
  • வளிமண்டலவியல் பற்றிய தரவுகளைப் பெற்றுக்கொடுத்தல்.
  • தேசிய அபிவிருத்திக்கும், ஆராய்ச்சி நடவடிக்கைகளுக்கும் தேவையான சாலநிலை மற்றும் வானிலை சேவைகள் மற்றும் தரவுகள் என்பவற்றினை வழங்குதல்.
  • காலநிலை, வானிலை, வானிலை மாற்றங்கள் என்பவற்றுடன் தொடர்புடைய கற்கைகள் மற்றும் ஆய்வுகளுக்கு ஆர்வமூட்டல்.
  • காலநிலை, வானிலை மற்றும் வானிலை மாற்றங்கள் போன்ற தொனிப்பொருளுடன் தொடர்புடைய துறைகளின் கல்விசார், பயிற்சி நிகழ்ச்சித் திட்டங்கள் மற்றும் செயலமர்வுகளை ஒழுங்கு செய்தலும் அவற்றிற்குப் பங்களிப்புச் செய்தலும்.
  • பாடசாலை மாணவர்கள், கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் தீர்மானம் எடுப்போர் உள்ளிட்ட ஆர்வம் காட்டும் குழுக்களுக்கு குறிப்பிடப்படுகின்ற தொனிப்பொருளுடன் தொடர்புடைய கல்வி, பயிற்சி நிகழ்ச்சித் திட்டங்கள் மற்றும் செயலமர்வுகளை ஒழுங்கு செய்தலும் அவற்றிற்குப் பங்களிப்புச் செய்தலும்.
  • கண்காட்சிப் பொருட்கள் மற்றும் வளவாளர்களை வழங்குவதன் மூலம் கண்காட்சிகளுக்கு பங்களிப்புச் செலுத்துதல்.
  • வேண்டுகோளின்மீது விசேட காலநிலை மற்றும் வானிலை தொடர்பான சேவைகளை வழங்குதல்.
  • மட்டுப்படுத்தப்பட்ட வானசாஸ்திரம் (சூரியன், சந்திரன், கோல்கள்) மற்றும் நிலப்பரப்பின் காந்த நிலை பற்றிய சேவைகளை வழங்குதல்.
Last Updated on Sunday, 06 January 2013 03:17  

கால நிலை சேவைகள்

தகவல் சேவைகள்

உள்ளடக்கம் பார்க்கப்பட்ட தடவைகள் : 2860784