Satellite Images

 


Satellite Images
Courtesy of Himawari Satellite

Last 24 hours

max temperature
Max. Temperature 36.6°C
Polonnaruwa
min temperature
Min. Temperature 11.9°C
Nuwara Eliya
max rain
Max. Rainfall 126.5mm
Kalmunai (Batticaloa)

Find us on FACEBOOK

Online Service

Providing Meteorological data and information online

 Weather and Climate Data

ஆழ்கடல் மீன்பிடிக் கலங்களுக்கான வானிலைமுன்னறிவிப்பு

வட அகலாங்கு 20 – தென் அகலாங்கு 10 மற்றும் கிழக்கு நெடுங்கோடு 60-100 இற்கு இடையிலான கடற்பகுதிக்கானது

(2020ஒக்டோபர் 22ஆம் திகதிமுற்பகல்07.00மணிக்கு வெளியிடப்பட்டது, அடுத்த 3 நாட்களுக்கானது)

நாட்டைச்சூழவுள்ளகடற்பரப்பிற்கானது

கொழும்பிலிருந்துகாலிஊடாகமாத்தறை வரையான கடற்பரப்புகளில்சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டைச் சூழவுள்ளகடற்பரப்புகளில்காற்றானது மேற்கு முதல் தென்மேற்குவரையானதிசைகளிலிருந்து வீசக்கூடும். காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரை காணப்படும்.

மாத்தறையிலிருந்துஹம்பாந்தோட்டைஊடாக பொத்துவில் வரையானகடற்பரப்புகளில் காற்றின் வேகமானதுஅவ்வப்போது மணித்தியாலத்துக்கு50-60 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக்கூடியசாத்தியம் காணப்படுகின்றது.

புத்தளத்திலிருந்துமன்னார்ஊடாக காங்கேசந்துறை வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானதுஅவ்வப்போது மணித்தியாலத்துக்கு50 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக்கூடியசாத்தியம் காணப்படுகின்றது.

மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டைஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகள் அவ்வப்போது கொந்தளிப்பாகக்காணப்படும்.

நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகள் மிதமான அலையுடன் காணப்படும்.

வங்காள விரிகுடா கடற்பரப்பிற்கானது

மேற்கு - மத்திய வங்காள விரிகுடா கடற்பரப்பிற்கு மேலாக ஒரு குறைந்த அழுத்தப் பிரதேசம் உருவாகியுள்ளது. இது வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று ஒரு தாழமுக்கமாக வலுவடையக்கூடிய சாத்தியம் காணப்படுவதுடன் அடுத்த 24 மணித்தியாலங்களில் ஒரு ஆழமான தாழமுக்கமாக மேலும் வலுவடையக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மேற்கு - மத்திய வங்காள விரிகுடா கடற்பரப்புகளிலும் வடமேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளிலும் (14N - 20N, 82E - 93E) இன்றிலிருந்து தொடர்ந்து வரும் நாட்களில் பலத்த அல்லது மிகக் கடுமையான காற்று, பலத்த மழைவீழ்ச்சி, கொந்தளிப்பான அல்லது மிகவும் கொந்தளிப்பான கடல் போன்ற நிலைமைகள் எதிர்பார்க்கப்படுகின்றது.

மேற்குறிப்பிட்ட ஆழம் கூடிய கடற்பரப்புகளில் 2020 ஒக்டோபர் 23ஆம் திகதி வரை மீனவர்கள் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

வானிலை:  

15N - 20N, 80E - 100E           : பெரும்பாலானஇடங்களில்மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்

03N - 11N, 80E - 90E             : பிரதானமாக சீரான வானிலை

ஏனையகடற்பகுதிகளில்     :பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்

காற்று:

13N - 20N, 80E - 95E             : இடஞ்சுழியாக /30-40 கி.மீ மணி; அவ்வப்போது 50-60 கி.மீ மணி வரை அதிகரிக்கலாம்

00 - 13N, 80E - 92E                : தென்மேற்கு திசையிலிருந்து /30-40 கி.மீ மணி; அவ்வப்போது 50-60 கி.மீ மணி வரை அதிகரிக்கலாம்

ஏனையகடற்பகுதிகளில்     : தென்மேற்கு முதல்வடக்கு வரையான திசைகளிலிருந்து /20-35 கி.மீ மணி

கடல் நிலை:

13N - 20N, 80E - 95E             : மிதமான அலை முதல் ஓரளவு கொந்தளிப்பு வரை; அவ்வப்போதுகொந்தளிப்பு

00 - 13N, 80E - 92E                : ஓரளவு கொந்தளிப்பு; அவ்வப்போதுகொந்தளிப்பு

ஏனையகடற்பகுதிகளில்     : சாதாரண முதல்மிதமான அலை வரை

அரேபிய கடற்பரப்பிற்கானது

வானிலை:

10N - 20N, 70E - 80E             :பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்

02N - 06N, 65E - 78E             : சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்

09N - 06N, 65E - 70E             : சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்

ஏனையகடற்பகுதிகளில்     : பிரதானமாக சீரான வானிலை

காற்று:

00 - 10N, 75E - 80E                : மேற்கு முதல்தென்மேற்கு வரையான திசைகளிலிருந்து /30-40 கி.மீ மணி; அவ்வப்போது 50-55 கி.மீ மணி வரை அதிகரிக்கலாம்

00 - 13N, 70E - 75E                : மேற்கு திசையிலிருந்து /20-30 கி.மீ மணி; அவ்வப்போது 40 கி.மீ மணி வரை அதிகரிக்கலாம்

13N - 20N, 60E - 75E             : வடமேற்கு திசையிலிருந்து /20-35 கி.மீ மணி

ஏனையகடற்பகுதிகளில்     : மேற்கு திசையிலிருந்து /20-30 கி.மீ மணி

கடல் நிலை:                    

00 - 10N, 75E - 80E                : மிதமான அலை முதல் ஓரளவு கொந்தளிப்பு வரை; அவ்வப்போதுகொந்தளிப்பு

00 - 17N, 60E - 75E                : மிதமான அலை முதல் ஓரளவு கொந்தளிப்பு வரை

ஏனையகடற்பகுதிகளில்     : சாதாரண முதல்மிதமான அலை வரை

தென்னிந்திய கடற்பரப்பிற்கானது

வானிலை:                                                                          

00 - 10S, 88E - 100E              : பெரும்பாலானஇடங்களில்மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்

00 - 10S, 76E - 88E                : சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்

ஏனையகடற்பகுதிகளில்     : பிரதானமாக சீரான வானிலை

காற்று:

06S - 10S, 60E - 80E              : வலஞ்சுழியாக /30-40 கி.மீ மணி; அவ்வப்போது 50 கி.மீ மணி வரை அதிகரிக்கலாம்

05S – 10S, 85E - 94E             : வலஞ்சுழியாக /30-40 கி.மீ மணி

00 – 06S, 60E - 82E               : தென்மேற்கு திசையிலிருந்து /20-40 கி.மீ மணி

ஏனையகடற்பகுதிகளில்     : வடக்கு அல்லது மாறுபட்ட திசைகளிலிருந்து /10-30 கி.மீ மணி

கடல் நிலை:                         

00 – 10S, 60E - 82E               : மிதமான அலை முதல் ஓரளவு கொந்தளிப்பு வரை

05S – 10S, 85E - 94E             : மிதமான அலை

ஏனையகடற்பகுதிகளில்     : சாதாரண முதல்மிதமான அலை வரை

** இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் கடற்பகுதிகளில் அவ்வப்போது பலமான காற்று வீசுவதுடன் அக்கடற்பிரதேசங்கள்கொந்தளிப்பாகவும்காணப்படும்.

கடமை வளிமண்டலவியலாளர்

வளிமண்டலவியல் ஆராய்ச்சி திணைக்களம்